Mozilla

Firefox உலாவியின் தனியுரிமை அறிவிப்பு

உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளோம். Mozillaக்கு (அதாவது எங்களுக்கு) Firefox தகவலை அனுப்பும்போது, அந்தத் தகவலை எப்படிப் பயன்படுத்துவோம் என்பது எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • உலாவி மற்றும் துணைநிரல்களின் புதுப்பிப்புகள்

    உலாவி புதுப்பிப்புகள்: Firefox உலாவி புதுப்பிப்புகளைத் தேடும்போது, ஒரு நாளுக்கு ஒரு முறை, பின்வரும் தகவலை Mozilla க்கு அனுப்புகிறது: உங்கள் Firefox பதிப்புத் தகவல், மொழி விருப்பத்தேர்வு, இயக்க முறைமை மற்றும் பதிப்பு. பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் புதுப்பிப்புகளை முடக்கலாம்ஆனால் இது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் இணைப்புகளை நீங்கள் திறப்பதற்கு உங்களை அனுமதிக்கலாம்.

    துணைநிரல்கள் தடுப்புப்பட்டியல்: தீங்கிழைக்கும் துணைநிரல்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க உதவும் துணைநிரல் தகவலைச் சரிபார்க்க, ஒரு நாளுக்கு ஒருமுறை Mozilla ஐ Firefox தொடர்புகொள்கிறது. எடுத்துக்காட்டாக, இதில் அடங்குபவை: உலாவிப் பதிப்பு, OS மற்றும் பதிப்பு, இருப்பிடம், கோரிக்கைகளின் மொத்த எண்ணிக்கை, கடைசி கோரிக்கையின் கால அளவு, நாளின் கால அளவு, IP முகவரி மற்றும் நீங்கள் நிறுவிய துணைநிரல்களின் பட்டியல் போன்றவை இதில் அடங்கும். நீங்கள் எந்த நேரத்திலும் மீட்டா தரவுப் புதுப்பிப்புகளை முடக்கலாம் ஆனால் இது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் இணைப்புகளை நீங்கள் திறப்பதற்கு உங்களை அனுமதிக்கக்கூடியது.

  • துணுக்குகள்

    Firefox இன் இயல்புநிலை முகப்புப் பக்கம் (<about:home>) உங்களுக்குப் பயன்படும் என்று நாங்கள் நினைக்கும் சிறுசிறு தகவலை, தேடல் பட்டியின் கீழ் ஏற்றுகிறது. இவற்றை "துணுக்குகள்" என அழைப்போம். புதிய துணுக்குகள் கிடைக்கும்பட்சத்தில், அவற்றை உங்களுக்கு வழங்க ஒரு நாளுக்கு ஒருமுறை Firefox ஆனது Mozilla உடன் இணைகிறது. துணுக்குகள் கிளிக் செய்யப்பட்ட எண்ணிக்கை, துணுக்கின் பெயர், உலாவியின் மொழி மற்றும் நீங்கள் பயன்படுத்தும் Firefox பதிப்பு ஆகியவற்றை Mozilla சேகரிக்கக்கூடும். இத்தகவலை 60 நாட்களுக்கு பிறகு, தொகுக்கப்பட்ட வடிவத்தில் தொடர்ந்து வைத்திருப்போம்.

    துணுக்குகள் தொடர்பானவற்றைக் காட்டுவதற்கு உதவியாக, உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தி நாடு அளவில் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய Mozillaக்கு Firefox மாதாந்திர அறிக்கையை அனுப்பும். பின்னர் நாங்களும் அகத்தில் சேமிக்கப்பட்ட நாடுரீதியான தகவலை Firefoxக்கு அனுப்புவோம். உங்களுக்குத் துணுக்குகளைக் காட்ட, அகத்தில் சேமிக்கப்பட்ட நாடு சார்ந்தத் தகவலின் அடிப்படையில் Firefox துணுக்குகளைத் தேர்வுசெய்யும்.

    Mozilla வழங்கும் சில துணுக்குகள் ஊடாடத்தக்கவை, மேலும் உங்கள் விருப்பப்படி தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பகிர அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, Android இல் Firefox ஐ நிறுவுவதற்கான SMS ஐப் பெற உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடலாம். தகவல்கள் எங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் மார்க்கெட்டிங் விற்பனையாளர் மூலம் பெறப்பட்டு, கையாளப்படும்.

  • Firefox ஹெல்த் ரிபோர்ட் (FHR) என்பது உங்கள் உலாவியின் நிலைப்புத்தன்மை மற்றும் செயல்திறன பற்றிய நுண்ணறிவுகளையும், அதிகளவு சிதைவு விகிதங்கள் அல்லது மிகவும் மெதுவான துவக்கம் போன்று நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். Mozilla பிற Firefox பயனர்களின் தரவுடன் சேர்த்து உங்கள் தரவையும் சேகரித்து ஒன்றுதிரட்டுகிறது, பின்னர் அவற்றை உங்கள் உலாவிக்கு அனுப்புகிறது, இதன் மூலம் உங்கள் Firefox காலப்போக்கில் எப்படி மாறுகின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, இந்தத் தரவில் அடங்குபவை: சாதன வன்பொருள், இயக்க முறைமை, Firefox பதிப்பு, துணைநிரல்கள் (எண்ணிக்கை மற்றும் வகை), உலாவி நிகழ்வுகளின் நேரம், ரெண்டரிங், அமர்வு மீட்டெடுப்புகள், அமர்வின் கால அளவு, எப்போதிலிருந்து சுயவிவரம் பயன்படுத்தப்படுகிறது, சிதைவுகளின் எண்ணிக்கை மற்றும் பக்கங்களின் எண்ணிக்கை போன்றவை. நீங்கள் பார்வையிடும் URLகளை Mozillaக்கு FHR அனுப்பாது.

    உங்கள் உலாவியை ஆய்வு செய்ய உதவுவது மற்றும் அதனுடனான செயல்திறன் சிக்கல்களைக் கண்டறிவது போன்ற FHR இன் செயல்பாட்டைப் பயனர்களுக்கு வழங்க, FHR மூலம் அனுப்பப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவோம். Firefox ஐ மேலும் சிறப்பானதாக்க, சேகரிக்கப்பட்ட FHR தரவிலிருந்து கிடைத்த முடிவையும் நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் தரவுப் பகிர்வை முடக்கலாம்.

  • பாதுகாப்பு

    தீங்கிழைக்கும் அல்லது போலியான இணையப் பக்கங்கள், சேதமடைந்த துணைநிரல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வழங்கிய SSL சான்றிதழ்கள் ஆகியவற்றை Firefox தானாகவே சரிபார்க்கிறது.

    பாதுகாப்பான இணையதள சான்றிதழ்கள்: பாதுகாப்பான இணையதளத்தை (அதாவது "https"), நீங்கள் பார்வையிடும் போது, இணையதளத்தின் சான்றிதழை Firefox சரிபார்க்கும். இது சான்றிதழால் குறிப்பிடப்பட்ட மூன்றாம் தரப்பு நிலை வழங்குநருடன் தொடர்பை ஏற்படுத்தலாம். தளத்தின் சான்றிதழை.அடையாளங்காண இந்த மூன்றாம் தரப்பு தகவலை Firefox அனுப்புகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றலாம், ஆனால் ஆன்லைன் சரிபார்ப்பு அம்சத்தை முடக்கினால், நீங்கள் பார்வையிடும் இணையதளத்தின் அடையாளத்தை Firefox உறுதிப்படுத்த முடியாது. இந்த அம்சத்தை முடக்குவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவலை இடைமறிப்பதற்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும். நீங்கள் நம்பகமில்லாத இணைப்பைஎதிர்கொண்டால், தொடர்புடைய சான்றிதழ்களை Mozilla க்கு அனுப்புவதையும் தேர்வுசெய்யலாம்.

    மோசடி மற்றும் தாக்குதலுக்கு எதிரான Firefox இன் பாதுகாப்பு: தீங்கிழைக்கும் அல்லது போலியான தளங்களையும் பதிவிறக்கங்களையும் அணுகுவதைத் தடுப்பதற்கு உதவும்வகையில் Firefox ஆனது Google இன் பாதுகாப்பு உலாவல் பட்டியல்களை ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை பதிவிறக்குகிறது ( https://www.google.com/policies/privacy/ இல் Google இன் தனியுரிமைக் கொள்கை உள்ளது). இந்தப் பட்டியல்களில் தோன்றாத பதிவிறக்கப்பட்டு செயல்படும் கோப்புகளுக்காக, பதிவிறக்கிய கோப்புடன் தொடர்பான URLகள் உள்ளிட்ட மீட்டா தரவையும் Firefox ஆனது பாதுகாப்பு உலாவல் சேவைக்கு அனுப்பலாம். பாதுகாப்பு உலாவலை பற்றி கூடுதலாக அறியவோ, அதை முடக்குவது பற்றி அறியவோ https://support.mozilla.org/kb/how-does-phishing-and-malware-protection-work ஐப் பார்வையிடவும். இந்த அம்சங்களை முடக்கினால், சட்டத்திற்குப் புறம்பான அல்லது தீங்கிழைக்கும் இணையதளங்கள் அல்லது பதிவிறக்கிய கோப்புகள் போன்றவைக் குறித்து Firefox ஆல் உங்களை எச்சரிக்க முடியாது.

  • Firefox இல் உள்ள பயன்பாட்டு விவரங்கள் அல்லது "டெலிமீட்ரி" என்னும் அம்சமானது பயனர் இடைமுக அம்சங்கள், நினைவகம் மற்றும் வன்பொருள் உள்ளமைவு ஆகியவை குறித்த பயன்பாட்டு, செயல்திறன் மற்றும் மறுமொழி போன்ற விவரங்களை Mozilla க்கு அனுப்பும். நிலையான இணையப் பதிவின் ஒரு பகுதியாக உங்கள் IP முகவரியும் சேகரிக்கப்படும். SSL ஐப் பயன்படுத்தி பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் பரிமாற்றப்படும் மற்றும் Firefox இன் எதிர்கால பதிப்புகளை மேம்படுத்தவும் உதவும். Mozilla க்கு அனுப்பப்பட்டதும், பயன்பாட்டு விவரங்கள் ஒன்றுதிரட்டப்படும், மேலும் Mozilla பணியாளர்கள் மற்றும் பொது பங்கேற்பாளர்கள் உள்பட எல்லா டெவெலப்பர்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்படும். டெலிமீட்ரி இயக்கப்பட்டிருக்கும் போது, சில குறுகிய கால சோதனைகள் பார்வையிட்ட தளங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்.

    Firefox இன் நைட்லி, ஆரோ மற்றும் பீட்டா கட்டமைப்புகளின் பயனர்கள் Mozilla க்கு கருத்து வழங்குவதற்கு உதவும் வகையில், அவற்றில் இயல்பாகவே இந்த அம்சமானது இயக்கத்தில் இருக்கும். Firefox இன் பொதுவான வெளியீட்டு பதிப்பில், இந்த அம்சம் இயல்புநிலையாக முடக்கப்பட்டிருக்கும்.

    நீங்கள் இங்கு டெலிமீட்ரி பற்றி மேலும் அறியலாம் மற்றும் இதை எப்படி இயக்குவது அல்லது முடக்குவது என்பதைப் பற்றியும் அறியலாம்.

  • டைல்கள்

    தேடல் பரிந்துரைகள் என்பது பிறர் தேடிய பொதுவான சொற்றொடர்களைக் கண்டறிய உதவும் ஓர் அம்சமாகும். இந்தத் தேடல் பரிந்துரைகளானது உங்கள் இயல்புநிலை தேடு பொறிகளால் (Google, Yahoo முதலியவை போன்ற) வழங்கப்படுகிறன, Firefox ஆல் அல்ல. இந்த அம்சத்தை நீங்கள் இயக்கி, உங்கள் இயல்புநிலை தேடு பொறியானது பரிந்துரைகளை ஆதரித்தால், பரிந்துரைகளை மீட்டெடுப்பதற்கு, ஆவ்சம் பட்டி அல்லது தேடல் பட்டியில் நீங்கள் உள்ளிடும் சொற்களை உங்கள் இயல்புநிலை தேடு பொறிக்கு Firefox அனுப்பலாம், மேலும் அது உங்கள் இயல்புநிலை தேடு பொறியிலிருந்து பொருந்தக்கூடிய தனியுரிமைக் கொள்கையால் நிர்வகிக்கப்படுகிறது. தேடல் பரிந்துரைகளை எவ்வாறு இயக்குவது அல்லது முடக்குவது என்பதையும் தேடல் பரிந்துரைகளைப் பற்றியும் இங்கே மேலும் அறியலாம ்.

  • இயல்புநிலை தேடல்

    உங்கள் இருப்பிடத்திற்கான சிறந்த இயல்புநிலை தேடல் என்ஜினைத் தேர்வுசெய்வதற்கு உதவ, Firefox உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தி இருப்பிடத்தைத் தேசிய அளவில் கண்டறிவதற்கான கோரிக்கையை Mozillaக்கு அனுப்பும். பின்னர் நாங்களும் அகத்தில் சேமிக்கப்பட்ட நாடுரீதியான தகவலை Firefoxக்கு அனுப்புவோம். பின்னர் இத்தகவலின் அடிப்படையில் இயல்புநிலையாகப் பயன்படுத்துவதற்கான தேடல் என்ஜினை Firefox தேர்வுசெய்யும். இதை எப்படி முடக்குவது என்பது உட்பட மேலும் தகவலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.


  • ஒத்திசைவு

    Firefox ஒத்திசைவு என்பது உங்கள் எல்லா சாதனங்களிலும், உங்களின் Firefox புக்மார்க்குகள், உலாவல் வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் அமைப்புகளை ஒத்திசைப்பதற்கு அனுமதிக்கும் சேவையாகும். ஒத்திசைவு சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் Firefox ஒத்திசைவு அறிவிப்பைப் படிக்கவும்.

  • இருப்பிடச் சேவைகள்

    Firefox இல் உங்கள் இருப்பிடத்தைக் கோர, தளங்களை அனுமதிக்கும் அம்சம் உள்ளது (எ.கா., வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைக் காட்ட அந்தத் தளங்களை அனுமதிக்க). உங்கள் இருப்பிடத்தைத் தளம் கோரிக்கையிட்டால், Firefox உங்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து பகிர்வதற்கு முன்னர் உங்கள் அனுமதியைத் தேடும். உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமையின் புவியிட அம்சங்கள், WiFi பிணையங்கள், செல்போன் கோபுரங்கள் அல்லது IP முகவரி போன்ற பல தகவலை Firefox பயன்படுத்தலாம். உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிவதில், இந்தத் தகவலில் சிலவற்றை, இதற்குச் சொந்தமான தனியுரிமைக் கொள்கையில்உள்ள Google இன் புவியிட சேவைக்கு அனுப்புவதும் அடங்கும்.

  • Firefox இல் சிதைவு ஏற்பட்ட பின்னர், Mozilla க்குச் சிதைவு அறிக்கையை நீங்கள் அனுப்பலாம், அதாவது அதற்கான விருப்பத்தேர்வும் உங்களிடம் உள்ளது. இந்த அறிக்கையில், Firefox இல் சிதைவு ஏற்பட்டதற்கான காரணம், சிதைவின்போது இயக்கத்தில் இருந்த URL மற்றும் சிதைவின் போது கணினியின் நினைவக நிலை போன்ற தகவல்கள் உட்பட Firefox ஐ மேம்படுத்துவதற்கு எங்களுக்கு உதவும் தொழில்நுட்பத் தகவலும் உள்ளடங்கும். நாங்கள் பெறும் சிதைவு அறிக்கையில் தனிப்பட்ட தகவலும் இருக்கலாம். சிதைவு அறிக்கைகளின் சில பகுதிகள், https://crash-stats.mozilla.com/ இல் பொதுவில் காட்டப்படும். சிதைவு அறிக்கைகளைப் பொதுவில் காட்டுவதற்கு முன், நாங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தானாகவே ஒழுங்குபடுத்துவதற்கான படிகளை மேற்கொள்வோம். நீங்கள் கருத்துத் தெரிவிக்கும் பெட்டியில் எதை எழுதினாலும் நாங்கள் அதை மாற்ற மாட்டோம்.

  • SSL பிழைகள்

    பாதுகாப்பான இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டால், பிழை அறிக்கையை Mozillaக்கு அனுப்பலாம். இணையதள சான்றிதழுடன் கண்டறிவதற்கான பிழைக் குறியீடுகளையும் இந்த அறிக்கை பதிவுசெய்யும். இத்தகவல் "பின்செய்யப்பட்ட" இணையதள சான்றிதழ்களின் திறன்களைக் கண்காணிப்பதற்கும், பயனர்களுக்கு எதிரான ஃபிஷிங் பாதிப்புகளைக் கண்டறிவதற்கும் Mozillaக்கு உதவும்.

  • துணை நிரல்கள்

    Firefox ஆனது துணைநிரல்கள் நிர்வாகியின் துணைநிரல்களைப் பெறும் பக்கத்தைக் காட்டுகிறது, இதில் பிரபலமான துணைநிரல்கள் காட்டப்படும் மற்றும் நீங்கள் ஏற்கனவே நிறுவிய துணைநிரல்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கிய பரிந்துரைகளும் காட்டப்படும். தனிப்பட்ட பரிந்துரைகளைக் காட்டுவதற்காக, உங்களிடம் உள்ள நிறுவப்பட்ட துணைநிரல்களின் பட்டியல், Firefox பதிப்பு தகவல் மற்றும் IP முகவரி போன்ற தகவல்களை Mozilla க்கு Firefox அனுப்புகிறது. இந்தத் தகவல் பரிமாற்றம், துணைநிரல்களைப் பெறுவதற்கான பகுதி திறப்பில் இருக்கும்போது மட்டுமே நிகழும் மற்றும் பின்வரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முடக்கலாம். Firefox இல் உள்ள செருகுநிரல் நிர்வாகியில் தேடுவதற்கு முக்கியச்சொற்களை உள்ளிடும் தேடல் புலம் உள்ளது, பரிந்துரைகளைக் காட்டுவதற்கு Mozilla இந்த முக்கியச்சொல் தேடல்களுடன் சேர்த்து, உங்கள் Firefox பதிப்புத் தகவல், இருப்பிடம் மற்றும் OS தகவலையும் சேகரிக்கிறது.

  • தள்ளு அறிவிப்புகள்

    நீங்கள் பங்கேற்கத் தேர்வுசெய்தால், அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை உங்களுக்குத் தளங்கள் அனுப்ப தள்ளு அறிவிப்புகள் அனுமதிக்கும். அறிவிப்புகளைப் பெற, எந்தத் தளங்களிலிருந்து தள்ளு அறிவிப்புகளைப் பெற ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பதைப் பற்றிய தகவலை Mozilla விற்கு Firefox அனுப்பும். ஒவ்வொரு தளமும் உங்களுக்கு அனுப்பும் அறிவிப்புகளின் எண்ணிக்கையுடன், அநாமதேய வடிவத்தில் இந்தத் தகவலைச் சேமிக்கிறோம். தள்ளு அறிவிப்புகள் பயனளவை மேம்படுத்துவதில் உருவாக்குநர்களுக்கு உதவ, குறிப்பிட்ட உருவாக்குநர்களுடைய தளத்தின் வருகையாளர்களில் அவர்களுடைய தள்ளு அறிவிப்புகளில் குழுசேர்ந்தவர்கள் அல்லது குழுவிலகியவர்கள் எண்ணிக்கைகள் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தகவலை அவர்களிடம் Mozilla பகிரலாம். இந்த அறிவிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் Firefox இல் தள்ளு அறிவிப்புகளை நிர்வகிக்கலாம்.