Mozilla

பயர்பாக்ஸ் மேகச் சேவைகளின் தனியுரிமைக் கொள்கை

உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளோம். பயர்பாக்ஸ் மேகச் சேவைகள் ("சேவைகள்") தகவல்களை மொசில்லாவுக்கு (அதாவது எங்களுக்கு) அனுப்பும் போது, எங்கள் மொசில்லா தனியுரிமைக் கொள்கை அந்தத் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விவரிக்கிறது.

உங்களுக்கு தெரிய வேண்டியவைகள்:

நீங்கள் பயன்படுத்தும் சேவைகளின் அம்சங்களைப் பொறுத்து எங்களுக்கு பல்வேறு வகையான தரவை அனுப்புகிறீர்கள்.

  • Firefox கணக்கு: நீங்கள் ஒரு கணக்கைப் பதிவுசெய்யும் போது, உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லை ஹேஷ்களாகவும் பெறுவோம். மேலும், நீங்கள் விரும்பினால் ஒரு சுயவிவரப் படத்தைச் சேர்க்கலாம். நீங்கள் Gravatarஐத் தேர்வு செய்தால், உங்கள் சுயவிவரப் படத்தைப் பெறுவதற்கு, Gravatar உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பகிர்வோம்.
  • ஒத்திசைவு: நீங்கள் ஒத்திசைவை பயன்படுத்தினால், ஒத்திசைவு செய்ய வேண்டி உங்களுடைய பலதரப்பட்ட தகவல்களான கீற்றுகள், சிறப்பு பட்டை, கடவுச்சொற்க்கள், புத்தகக்குறிகள், உலாவியின் முன்னுரிமைகள் மற்றும் சாதனத்தின் மற்ற தகவல்கள் என அனைத்தும் எங்களை வந்தடையும்.
  • என்னுடைய சாதனத்தை கண்டுபிடி: என்னுடைய சாதனத்தை கண்டுபிடி என்பதை இயக்கினால், உங்கள் Firefox கணக்கில் உள்நுழையும் போது, குறிப்பாக இணைக்கப்பட்ட சாதனத்தின் இருப்பிடத்தை அறியக் கோரப்பட்டால் மட்டும் உங்கள் சாதனத்தின் தோராயமான இருப்பிடத்தைப் பெறுவோம். உள்நுழைந்திருக்கும் போது, வரைபடத்தில் உங்கள் சாதனத்தின் கடைசியாக அறிப்பட்ட இருப்பிடங்களையும் பெறலாம். வழக்கமாக இந்த இருப்பிடங்களை நீக்குவதுடன், நீங்கள் கேட்கும் வரை மேலும் இருப்பிடங்களைச் சேகரிக்கமாட்டோம்.

எங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள.

  • இணைய தரவு கருவிகள்: எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகளை வழங்க, குக்கீகள், GIFகளை துடைத்தல் மற்றும் வலை வழிகாட்டிகள் போன்ற “இணைய தரவு கருவிகளைப்” பயன்படுத்துகின்றோம். உதாரணமாக, குக்கீகள் பயனர் உள்நுழைவு மற்றும் அங்கீகாரமளிப்பில் உதவுகின்றன. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காகத் தரவைச் சேகரிக்க இதே கருவிகளையும் பயன்படுத்துவோம். உதாரணமாக, வலை பகுப்பாய்வை வழங்கக் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.

  • விருப்பத்தேர்வுகள்: இங்கு சொடுக்குவதன் மூலம் குக்கீகள் என்றால் என்ன என்பது பற்றி மேலும் அறியலாம் மற்றும் பயர்பாக்ஸில் குக்கீகளை நிர்வகிக்கலாம். எமது மற்றும் பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட அம்சங்கள் குக்கீகளின் உதவி இல்லாமல் சரியாகச் செயல்பட முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்..