
பயர்பாக்ஸ் உருவாக்குநர் பதிப்பு தானாக மொசில்லாவிற்கு கருத்துக்களை அனுப்புகிறது. மேலும் அறிய
உருவாக்குநர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரே உலாவி, பயர்பாக்ஸ் உருவாக்குநர் பதிப்பானது உங்கள் வேலைமுறையினை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. முதன்முறையாக கட்டமைத்தல், சோதனையிடல், அளவிடல் இன்னும் பலவற்றை ஒரே இடத்தில் செய்யுங்கள்.
வேலன்சுடன், எந்த உலாவியிலும் அல்லது சாதனத்திலும் உங்கள் பயன்பாட்டினை ஆய்வு செய்து பிழைத்திருங்கள் — வேலன்சு என்பது பயர்பாக்ஸ் உருவாக்குநர் பதிப்பில் மட்டுமே காணப்படக்கூடிய ஒரு சக்திவாய்ந்த, முன் நிறுவப்பட்ட நீட்டிப்பு ஆகும்.
உடனடி விளைவாற்றும் வடிவமைப்பு பார்வையுடன் கூடிய இலக்கு திரையின் அளவுகள் மற்றும் பிக்சல்-துல்லியக் குறியாக்கத்திற்காக உள்ளமைந்த நடை திருத்துவானுடன் உங்களின் CSS மேன்மைப்படுத்தல்.
பயர்பாக்ஸ் உருவாக்குநர் பதிப்பு உங்கள் முதன்மை dev கருவிகளைச் சில புதிய திறம்வாய்ந்த கருவிகளுடன் ஒன்றாகக் கொண்டு வருகின்றது, அது ஒரே இடத்திலிருந்தே பல தளங்களில் பணிபுரியும் உங்கள் திறனை அதிகரிக்கும். இது நீங்கள் பயன்படுத்தும், எல்லாவற்றையும் விடச் சிறந்தது. மேலும் பயர்பாக்சிடமிருந்து மட்டுமே உள்ளது.
மேற்பார்வையாளர் பலகத்தின் பக்கத்தில் இயங்கும் CSS மற்றும் HTML அசைவூட்டத்தைத் பார்வையில் திருத்து. அளவுகோல் மற்றும் அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்தி எந்தவொரு உறுப்புக்கும் சீரமைத்தல், பரிமாணங்கள், திணிப்பு போன்றவற்றைச் சரிபார்க்கவும்.
காட்சி தொகுப்பு கருவிகளைப் பற்றி மேலும் அறிய
கடலின் ஆழம் ஆராய விசித்திரமான உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ள உருவாக்குநர் பதிப்புகளில் உள்ள காட்சி அசைவூட்டம் CSS மற்றும் தொகுக்கும் கருவிகளைப் பயன்படுத்தவும்.
போட்டியான உருவாக்குநர் கருவிகளை முயற்சிக்கவும்
உங்கள் இணைய உள்ளடக்கத்தின் சட்ட வீதம், நினைவக நுகர்வு மற்றும் JS சுயவிவரத்தை ஒரு ஒருங்கிணைந்த காலவரிசை பார்வையில் எளிதில் அடையாளம் காணவும், செயல்திறன் குறைபாடுகளை சரிசெய்யவும் உதவும்.
செயற்திறன் கருவிகளைப் பற்றி கூடுதலாக அறிய
எந்தவொரு வலைப்பக்கத்தின் HTML மற்றும் CSS ஆகியவறறைப் பரிசோதித்து, ஒரு பக்கத்தின் அமைப்யைம் தளவமைப்பையும் எளிதாக மாற்றலாம்.
பக்க ஆய்வி பற்றி மேலும் அறிக
ஆய்வு மற்றும் அனைத்து ஒலிக்கருவி முனைகளில் நீங்கள் எதிர்பார்த்த வழியில் சம்பந்தம் இருக்கும் என்று உறுதி செய்ய நேரலையில் வலை ஆடியோ API உடன் தொடர்பு கொள்க.
இணைய ஒலி திருத்தி பற்றி மேலும் அறிய
வலைப்பக்கத்துடன் தொடர்புடைய பதிவுகளைப் பாருங்கள், ஜாவா சிறுநிரல் மூலம் வலை கன்சோலைப் பாவித்து வலை பக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
வலை பணிமுனையம் பற்றி மேலும் அறிக
வழுக்களைக் கண்காணிக்க ஜாவா ஸ்கிரிப்ட் நிரல் ஊடாக சென்று அதனை ஆய்வு (அ) அதன் நிலையை மாற்றுக.
ஜாவா ஸ்கிரிப்ட் வழுநீக்கி பற்றி மேலும் அறிக
உங்கள் உலாவி உருவாக்கும் பிணைய கோரிக்கைகள் அனைத்தையும், ஒவ்வொரு கோரிக்கை எடுக்கும் நேரத்தையும், ஒவ்வொரு கோரிக்கையின் விவரத்தையும் பார்க்கவும்.
பிணைய கண்காணிப்பு பற்றி மேலும் அறிக
புதியதை உருவாக்க ஏற்கனவேயுள்ள CSS பாணி தாள்களை நினைத்த பக்கத்தில் பயன்படுத்த, ஒரு பக்கத்துடன் இணைந்துள்ள CSS பாணிகளை பார்க்கவும் தொகுக்கவும்.
பாணி தொகுப்பான் பற்றி மேலும் அறிய
உலாவி சாளர அளவை மாற்றாமல் உங்கள் வலைத்தளம் அல்லது வலை செயலிகள் வெவ்வேறு திரை அளவுகளில் எப்படி தோன்றுகிறது என்பதை பாருங்கள்.
பதிலளிப்பு வடிவமைப்புக் காட்சி பற்றி மேலும் அறிக
பயர்பாக்ஸ் மேம்பாட்டாளர் பதிப்புடன் முன்கூட்டியே நிறுவப்பட்ட இந்த வலுவான நீட்டிப்புடன் பல உலாவிகளிலும் சாதனங்களிலும் உங்கள் பயன்பாடுகளை உருவாக்குங்கள் பிழைத்திருத்துங்கள்.
ஒத்திசைவு பற்றி கூடுதலாக அறியவும்