Mozilla

இணையதளங்கள், தகவல்தொடர்புகள் & குக்கீகளுக்கான தனியுரிமை அறிக்கை

உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளோம். Mozilla (அதாவது நாங்கள்) உங்கள் தகவல்களைச் சேகரிக்கும் போதெல்லாம், எங்கள் Mozilla தனியுரிமைக் கொள்கை ஆனது எவ்வாறு நாங்கள் அந்தத் தகவல்களை கையாளுவோம் என்பதை விவரிக்கிறது.

இந்தத் தனியுரிமை அறிவிப்பானது Mozilla இயக்கப்படும் mozillians.org, mozilla.org, firefox.com, மற்றும் webmaker.org பிற டொமைன்கள் உட்பட இணையதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளுக்குப் பொருந்தும். இதில் உள்ளடங்குபவை, எ.கா: bugzilla.mozilla.org, reps.mozilla.org, careers.mozilla.org, developers.mozilla.org, support.mozilla.org, addons.mozilla.org, மற்றும் wiki.mozilla.org.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • சமூக ஊடகம்: Twitter மற்றும் Facebook போன்றவற்றில் உள்ள எங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் ஈடுபட்டிருந்தால், நாங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பெறலாம். இந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தினால், அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளும் பொருந்தும், மேலும் நீங்கள் அவற்றைப் படிப்பதையும் பரிந்துரைக்கின்றோம்.

  • பணி, பயிற்சி & உதவித்தொகைப் பயிற்சி விண்ணப்பதாரர்கள்: Mozilla இல் வேலைவாய்ப்பு, பயிற்சி அல்லது உதவித்தொகைப் பயிற்சி வாய்ப்புகளுக்கான விண்ணப்பதாரர்கள் எங்களிடம் பெயர், தெரு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சுயவிவரத்தைக் கொடுக்க வேண்டும். வாய்ப்புகளைப் பற்றி விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கவும் மற்றும் விண்ணப்பங்களைச் செயலாக்கவும், மதிப்பிடவும் நாங்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்துவோம். வேலைவாய்ப்பு விண்ணப்பங்களில் எங்களுக்கு உதவ ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்தைப் பயன்படுத்துவோம். மூன்றாம் தரப்பு நிறுவனத்துடனான எங்கள் தரவு நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, எங்கள் Mozilla தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

  • பங்களிப்பாளர்கள்: Mozilla க்கான தன்னார்வ பங்கேற்பில் ஒரு சமூகம் பங்களிப்பாளராக உங்கள் பங்களிப்புத் தொடர்பாகவும், உங்கள் முயற்சிகளை அங்கீகரிக்கவும் உங்களைத் தொடர்புகொள்ள Mozilla மற்றும் பிறருக்கு உங்கள் மின்னஞ்சல் தேவைப்படலாம். நீங்கள் Bugzilla, Mozilla Reps அல்லது குறியீட்டுத் தளத்திற்கு பங்களிப்பின், உங்கள் மின்னஞ்சல் முகவரியும், உங்கள் பெயரும் எல்லா இணையப் பயனர்களுக்கும் பொதுவில் கிடைக்கும். Mozillians.org இல் சுயவிவரம் உருவாக்கினால், அதனை Mozilla பணியாளர்கள் மற்றும் Mozilla பங்களிப்பாளர்களால் அணுக முடியும். உங்கள் சுயவிவரத் தரவை சுயவிவர அமைப்புகளில்திருத்தலாம். திரட்டப்பட்ட தரவை Mozilla சமூகத்தில் காட்சிப்படுத்துமாறு பகிர, நாங்கள் சில நேரங்களில் டேஷ்போர்டுகளின் மூலங்களிலிருந்து (Bugzilla போன்ற) பங்களிப்பாளர் தகவலைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, https://wiki.mozilla.org/Contribute/Dashboards. முடிந்தால், பொதுவில் காட்சிப்படுத்தப்பட்ட தொடர்புத் தகவலைக் குறைக்க முயற்சிப்போம்.

  • பயனர் பின்னூட்டம்: input.mozilla.org போன்ற வலைதளங்கள், தயாரிப்பின் பயன்பாட்டு அனுபவம் வழியாக அல்லது மின்னஞ்சல், Bugzilla, IRC, சமூக ஊடகக் கணக்கு, எங்கள் Get Involved பக்கம் போன்ற சேனல்கள் வழியாக அல்லது மாணவத் தூதுவர்கள் போன்ற குழுக்கள் வழியாக எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய பின்னூட்டத்தை எங்களுக்கு அளிக்கலாம். உங்கள் கருத்துக்கள் பொதுவில் அணுகக்கூடியதாக இருக்குமாதலால், இந்த மன்றங்களில் பகிர்ந்துகொள்ளும் போது தனிப்பட்ட தகவல்களைக் குறைக்கவும்.

  • கணக்குகள்: சில இணையதளங்களில் (எடுத்துக்காட்டாக Marketplace, AMO, MDN மற்றும் Webmaker) வடிவமைப்பாளர் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிப்பது, பயனர் விமர்சனங்கள் அல்லது கருத்துக்களைச் சமர்ப்பிப்பது மற்றும் குறிப்பிட்ட வகையான பயன்பாடுகளை நிறுவுவது ஆகியவற்றிற்கு கணக்கு உருவாக்கம் தேவை. உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல்களை நீங்கள் அவ்வப்போது பெறலாம்.


  • செயல்திறன்: குறிப்பிட்ட தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் செயல்திறனை மேம்படுத்த நாங்கள் குக்கீக்கள், சாதனத் தகவல் மற்றும் IP முகவரிகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு:

    • உங்களின் Firefox மொழிக்கான விருப்பத்தேர்வு மற்றும் Firefox துணை நிரல்களை நினைவில்கொள்வதற்கு குக்கீக்கள் பயன்படுகின்றன. மேலும், அவை பயனர் உள்நுழைவு மற்றும் அங்கிகாரம் அளிப்பதற்கு உதவுகிறது. இதனால் குறிப்பிட்ட Mozilla இணையதளங்களில் உங்கள் கடவுச்சொற்களை உள்ளிடுவதை நீங்கள் தவிர்க்கலாம்.
    • மொழி மற்றும் நாடு அடிப்படையில் தகவல் பரிமாற்றங்களைக் கட்டமைக்க IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • Firefox Marketplace மற்றும் Webmaker இல் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்குவதற்காக நாடு, மொழி, ஆபரேட்டர் மற்றும் OEM போன்ற சாதனத் தகவல் பயன்படுத்தப்படலாம்.
  • அளவீடுகள்: எங்களின் தயாரிப்புகள், சேவைகள், தகவல் பரிமாற்றங்கள், இணையதளங்கள், ஆன்லைன் பிரச்சாரங்கள், துணுக்குகள் மற்றும் பிற தளங்களுடன் பயனர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்ற மதிப்பீட்டைப் புரிந்துகொள்ளத் தெளிவான GIFகள், குக்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர் சேவைகள் எங்களுக்கு உதவுகின்றன. நாங்கள் பயன்படுத்துவது:

    • பயனர்கள் எங்கள் இணையதளங்களுடன் இணைந்திருக்கும் விதத்தின் அளவீட்டைப் பெற, Google Analytics உங்கள் சாதனத்தில் குக்கீயை நிறுவும். இது இணையதளத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.
    • இணைய உள்ளடக்கத்தின் வேறுபாடுகளை சோதனைச் செய்வதற்கு எங்களுக்கு உதவ, Optimizely மற்றும் ShareProgress உங்கள் சாதனத்தில் குக்கீயை நிறுவும். சிறந்த இணைய அனுபவங்களை பயனர்களுக்கு வழங்க இது எங்களுக்கு உதவுகிறது.
    • DoubleClick ஆனது எங்களது Firefox பதிவிறக்கப் பக்கத்தில் தெளிவான GIF ஐப் பயன்படுத்துகிறது. இது எங்களின் விளம்பரப் பிரச்சாரத்தின் திறன்களை அளவிட உதவுகிறது.

  • குக்கீ வரலாறு: உங்கள் Firefox விருப்பத்தேர்வுகளில் கருவிகள்/விருப்பங்கள்/தனியுரிமை வரலாறு பிரிவில் உங்கள் தனிப்பட்ட குக்கீகளை ஏற்க அல்லது மறுக்க முடியும். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட அம்சங்கள் குக்கீகளின் உதவி இல்லாமல் சரியாகச் செயல்பட முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

  • தடமறியாமை: Mozilla இலக்கு விளம்பரங்களை வழங்க மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் கண்காணிப்பது கிடையாது. Firefox இல் உள்ள கருவிகள்/விருப்பங்கள்/தனியுரிமைப் பிரிவில் உள்ள கண்காணிப்பில் தடமரியாமையை இயக்க முடியும். இது உங்கள் தகவல் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற வழியைப் பற்றி, மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் விருப்பத்தைக் குறிக்க உதவுகிறது.

  • மின்னஞ்சல்: எங்கள் மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளைப் பெறுவது விருப்பத்தேர்வுக்குரியது, மின்னஞ்சலின் அடியில் அல்லது உங்கள் Mozilla மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் குழுவிலகலாம். எங்கள் மின்னஞ்சல்களை "உரை மட்டும்" வடிவமாகப் பார்ப்பதன் மூலம் கிளியர் GIFகளின் செயல்பாட்டை முடக்க முடியும்.

  • பகுப்பாய்வு & மேம்படுத்தல்: Mozilla இணையதளங்களை நீங்கள் பார்வையிடுவது தொடர்பான தரவு சேகரிக்கப்படுவதைத் தடுக்க, கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • Google: [Google பகுப்பாய்வு விலகல் உலாவி துணை நிரல்] (https://tools.google.com/dlpage/gaoptout) ஐ நிறுவவும். இதன் மூலம் உங்களின் பார்வையிடலைப் பெயற்றதாக்கலாம் மற்றும் Google பகுப்பாய்விற்கு தரவுப் பரிமாற்றத்தைத் தடுக்கலாம். சில Mozilla.org பக்கங்கள் எங்களது விளம்பரப் பிரச்சாரத்தின் திறன்களைப் புரிந்துகொள்ள, DoubleClick உடன் தொடர்புகொள்ளும் தெளிவான GIFகளைப் பயன்படுத்துகின்றன. Google இன் விளம்பர அமைப்புகளில் உள்ள DoubleClick இல் தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் கட்டுப்படுத்த முடியும் (உங்கள் Google கணக்கில் உள்நுழைய அறிவுறுத்தப்படுவீர்கள்).
  • Optimizely: www.mozilla.org இலிருந்து விலகவும் அல்லது கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, (https://www.optimizely.com/opt_out) ஐப் [Optimizely விலகல் இணையதளம்] பார்வையிடவும்.
  • ShareProgress: உங்கள் உலாவியில் கண்காணிக்க வேண்டாம் என்பதை இயக்கவும்.

  • சமூக ஊடகம்: Mozilla வலைத்தளங்களில் உள்ள சமூகப் பகிர்வு பொத்தான்கள், நீங்கள் குறிப்பாக பொத்தானை கிளிக் செய்யாத வரை சமூக ஊடக வழங்குநருடன் தரவைப் பகிர்ந்துகொள்ள முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.


  • கட்டணச் செயலாக்கம்: Mozilla எந்த நிதி சார்ந்த தகவலையும் பெறுவதில்லை, அது உங்களிடமிருந்து எங்களின் மூன்றாம் தரப்பு விற்பனையாளருக்கு செயலாக்கத்திற்காக பரிமாற்றப்படுகிறது. பரிவர்த்தனையின் போது மூன்றாம் தரப்பினரின் பெயர் காட்டப்படும். மூன்றாம் தரப்பு நிறுவனத்துடனான எங்கள் தரவு நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, எங்கள் Mozilla தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.